சிங்கப்பூர் மகளிர் வலைப்பந்து அணி, ஆசிய வலைப்பந்துப் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது.

இன்று ஹாங்காங்கில் இறுதிப் போட்டி நடந்தது.

57 – 33 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணி ஹாங்காங்கை வீழ்த்தியது.

இது சிங்கப்பூரின் ஐந்தாவது ஆசிய வலைப்பந்துப் பட்டம்.